;
Athirady Tamil News

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் கோழைத்தனமாது! வவுனியா ஊடக அமையம் கண்டனம்!!!

0

வடக்கில் முல்லைத்தீவை சேர்ந்த ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வா மீது இராணுவத்தினர் நேற்று 27-11-2021 கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வா மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை, வவுனியா ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கின்றது.
தனது ஊடக பணியின் நிமித்தம் வட்டுவாகல் பகுதியில் முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மீது சில இராணுவத்தினர் ஒன்றிணைந்து கோழைத்தனமாக தாக்குதலை மேற்கொண்டதானது ஒரு மனிதநேயமற்ற செயலாகவே இருக்கின்றது.

ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையின் தொடர்ச்சியாகவே, இந்நடவடிக்கையை நோக்க கூடியதாக இருக்கின்றது.
இராணுவத்தினரால் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் சம்பவமானது, அப்பட்டமான ஒரு மனித உரிமை மீறலாகவே பார்க்கமுடியும்.
இராணுவத்தினரின் இச்செயற்பாடு ஊடகவியலாளரின் சிறப்புரிமையை மீறும் ஒரு செயலாகும்.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காலத்திலும் தமது உயிரை துச்சமாக மதித்து மக்களுக்கு செய்திகளை சேகரித்து வழங்கிய ஊடகவியலாளர்கள் மீது, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இச்செயற்பாடானது பெரும் கவலையளிக்கின்றது.
இராணுவத்தினரால், குறித்த ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட இடத்தில் எந்தவிதமான இராணுவ முகாமோ அல்லது காவலரணோ இருந்திருக்கவில்லை என தெரியவருகின்றது.
இவ்விடயம் தொடர்பாக, வவுனியா ஊடக அமையம் ஜனாதிபதியின் கவனத்திற்கு இத்தாக்குதல் சம்பவத்தை கொண்டு வருகின்றது.

ஜனாதிபதி இராணுவத்தினரின் நடவடிக்கை தொடர்பாக, பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொண்டு ஊடகவியலாளரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, ஊடகவியலாளர்களின் தொழில் சுதந்திரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

முல்லைத்தீவின் பிராந்திய ஊடகவியலாளர் மீதான தாக்குதலைக் கண்டிக்கின்றோம். – யாழ்.ஊடக மன்றம்!!

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை!!

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.