யாழ் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் யாழ் இந்தியத் துணைத்தூதருடன் சந்திப்பு! (படங்கள், வீடியோ)
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவரை யாழ் இந்திய துணைத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சம்மேளனத் தலைவர் அன்னராசா
யாழ் மாவட்ட மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் பாதிக்கப்படுகின்றார்கள் அத்துமீறிய சட்டவிரோத இந்திய மீனவர்களின் பாதிப்பு எங்களுடைய மீனவ பரம்பலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதோடு மீனவ சமூகத்தில் மீனவர்கள் கூலி தொழிலுக்கு செல்ல கூடிய துப்பாக்கிய நிலை காணப்படுவதோடு குடிப்பரம்பல் குறைக்கப்பட்டுள்ளது
நீண்ட காலமாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு எதிராக பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டும் தற்போதும் இந்திய மீனவர்களின் வருகை பருத்தித்துறை மற்றும் நெடுந்தீவு பிரதேசங்களில் அதிகரித்துக் காணப்படுகின்றன இந்த வருகையினை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறோம் அந்த வகையில் இன்றைய தினம் யாழ் இந்தியத் துணைத் தூதரைச் சந்தித்து பேசி உள்ளோம்
குறிப்பாக 2500 இந்திய மீனவர்களுக்கும் வடக்கு மீனவர்களுக்கும் உள்ள பிரச்சனைக்கு தீர்வு காணுமாறும் இந்தியாவுக்கோஅல்லது தமிழ்நாட்டுக்கோ எதிரான பிரச்சினையாக இதனை கருதாது பல கோடி ரூபாய் சொத்துகளை இழந்து இருக்கின்றோம் எங்களுடைய கடற்தொழில் அமைச்சு 500 கோடி ரூபாய்க்கு மேல் இந்திய அரசாங்கத்திடம் நஷ்ட ஈடு கோரியுள்ளது
இருந்தபோதிலும் யாழ் மாவட்ட மீனவர்கள் கூட்டுறவு சங்கங்கள் சமாசங்கள், சம்மேளனங்களினை பொறுத்தவரை எங்களுக்கு குறிப்பிட்ட தொகையை அண்ணளவாக 400 மில்லியன் ரூபாவை எங்களுடைய கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக வழங்குமாறும் அதற்குரிய திட்டம் ஒன்றினை தயாரித்து கடந்த வாரம் கடற்றொழில் அமைச்சின் சந்தித்து கையளித்திருக்கின்றோம் அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் இந்திய துணை தூதுவரிடமும் கையளித்துள்ளோம்
எங்களுடைய மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை அதிகரிக்க இந்த 400 மில்லியன் ரூபா உதவியினை தொழிலாளர்களுக்கு மானியமாகவும் சுழற்சி முறையில் வழங்குவதற்கு கோரி நிற்கின்றோம்
அந்த கோரிக்கையினை தாம் பரிசீலிப்பதாக யாழ் இந்திய துணை தூதுவர் தெரிவித்திருந்தார்.
அத்தோடு இலங்கையில் உள்ள இந்திய துணைத் தூதரகர் மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுடன் இந்திய இலங்கை மீனவர்கள் தொடர்பான பிரச்சினையை பேசி இருக்கின்றார் அதனை நாங்கள் வரவேற்கின்றோம் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”