;
Athirady Tamil News

பெண் காவலர் ஆணாக மாறும் அறுவை சிகிச்சைக்கு அனுமதி…!!

0

மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் காவலர் ஒருவர், ஆணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு அம்மாநில உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

காவல் பணியின் போது அந்த காவலரின் நடவடிக்கைகள் சக ஆண் காவலர்கள் போன்றே இருப்பதையும் அவர் சிறுவயது முதலே பாலின அடையாள கோளாறு பாதிப்புக்கு ஆளாகி உள்ளதையும் பரிசோதனை செய்த உளவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

இந்நிலையில் ஆணாக மாறும் அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்குமாறு கடந்த 2019ம் ஆண்டு காவல்துறை தலைமையகத்திடம் அந்த பெண் காவலர் முறைப்படி விண்ணப்பித்திருந்தார்.

அவரது விருப்பம் அரசிதழில் வெளியான நிலையில் அது தொடர்பான மனுவை மத்திய பிரதேச உள்துறை அமைச்சகத்திற்கு அம்மாநில காவல் தலைமையகம் பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில் பெண் காவலர் ஆணாக அறுவை சிகிசைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்று கூடுதல் தலைமை செயலர் ராஜேஷ் ரஜோரா தெரிவித்தார்.

நமது நாட்டின் சட்டவிதிகளின்படி, ஒரு இந்திய குடிமகன் தனது மதம் மற்றும் சாதியை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தனது பாலினத்தை தேர்வு செய்ய உரிமை உண்டு என்பதன் அடிப்படையில் இந்த அனுமதியை மத்திய பிரதேச உள்துறை அமைச்சகம் வழங்கியதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.