மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடை விதிப்போம்!!
எதிர்காலத்தில் அமைய உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மாவீரர் தின
நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய (03) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு
தொடர்ந்து உரையாற்றிய பொன்சேகா, இலங்கைக்கு வந்த 75 ஆயிரம் இந்திய
இராணுவத்தினரையே வெறும் 2500 பேரை அப்போது கொண்டிருந்த தமிழீழ
விடுதலைப் புலிகள் வீழ்த்தினார்கள். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதை
நாம் முழுமையாக வரவேற்போம். என்னை கொலை செய்ய வந்த நபரையியும்
விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஜே.வி.பியின் நினைவு நாளும் மாவீரர்கள் தினமும் ஒன்றல்ல. அரசியல்
மாற்றத்துக்காக ஜே.வி.பி ஆயுதம் ஏந்தி போராடினார்கள். ஆனால் புலிகள்
நாட்டை பிளவுப்படுத்தப் போராடினார்கள். யுத்தத்தில் உயிரிழந்தவர்களை
நினைவுக்கூறுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் பிரபாகரனை பிறந்தநாளை
வைத்துகொண்டு அதனை மாவீரர் தினமாகக் கொண்டாட முடியாது என்றார்.
இதேவேளை, மாவிரர் தினத்துக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என்கிற
நிலைப்பாட்டிலேயே எமது கட்சியின் தலைமை இருக்கிறது. தென்பகுதியில்
உள்ள சிங்கள மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்த வடக்கில் உள்ள சில
அரசியல்வாதிகள் இதேபோன்ற நிகழ்வுகளின் பின்புலத்தில் இருக்கிறார்கள்
எனவும் கூறினார்.