இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது- அமைச்சர் தகவல்…!!
உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. அந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது.
இங்கிலாந்து நாட்டிலும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் பாராளுமன்றத்தில் பேசும்போது, ‘ஒமைக்ரான் வைரஸ் இங்கிலாந்தின் பிராந்தியங்கள் முழுவதும் சமூக பரவலாக மாறியுள்ளது. இதில் சர்வதேச பயணத்துடன் தொடர்பில்லாத பாதிப்புகளும் உள்ளது. எனவே இங்கிலாந்தின் பல பகுதிகளில் தற்போது சமூக பரவல் என்பதை நாம் முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்தார்.