கருணை மதிப்பெண்களா?: சி.பி.எஸ்.இ. விளக்கம்..!!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொத்தேர்வை இரண்டு பருவமாக நடத்த முடிவு செய்தது. தற்போது முதல் பருவத் தேர்வு நடைபெற்று வருகிறது.
12-ம் வகுப்புக்கான கணக்கியல் (Accountancy) பாடத்தேர்வு கேள்வியில் தவறு இருந்ததாகவும், அதனால் ஆறு மதிப்பெண் வரை கருணை மதிப்பெண் வழங்க இருப்பதாகவும், ஆடியோ செய்திகள் தீயாக பரவியது. இதனால் மாணவர்களும் கருணை மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், ஆடியோ மூலம் வெளியாகி தற்போது பரவிக்கொண்டிருக்கும் கருணை மதிப்பெண் வழங்கப்படும் என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்றது. பொய்யானது என சி.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.