மாணவர்கள் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் – கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு…!!
கல்லூரி கல்வி இயக்குனர் சி.பூரணசந்திரன், அனைத்து மண்டலங்களின் கல்லூரிக்கல்வி இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக கடந்த 10-ந்தேதி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சில அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து கல்வி நிறுவன வளாகங்களில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதன்படி, முககவசம் அணிவது, கூட்டமாக அமர்ந்து உணவு அருந்துவதை தவிர்த்தல், கலை நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டமான நிகழ்ச்சிகளையும் தவிர்த்தல், கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்குதல், கை கழுவும் முறையை மாணவர்களிடையே வலியுறுத்துதல், சானிடைசர் பயன்படுத்த அறிவுறுத்துதல் ஆகியவற்றை அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி கல்லூரிகள தவறாது பின்பற்ற கண்டிப்பான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இந்த அறிவுரைகளோடு, கல்லூரிகள் சார்ந்த மாவட்ட நிர்வாகமும், மாவட்ட மருத்துவ நிர்வாகமும் வழங்கும் அறிவுரைகளையும் தவறாது பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.