சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை.. முன்னாள் கணக்காய்வாளர் விடுத்துள்ள அறிக்கை.. (படங்கள்)
சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை.. முன்னாள் கணக்காய்வாளர் விடுத்துள்ள அறிக்கை.. (படங்கள்)
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19.12.2021) சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தின் பொதுச்சபை கூடவுள்ளதாக, நிர்வாகசபை ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், பல குளறுபடிகளை மத்தியில் கூடவுள்ள அக்கூட்டத்தில் பல “கேள்விக்கணைகள், எதிர்வினைகள்” ஏற்படலாம் எனும் ஐயப்பாட்டில் அக்கூட்டத்தை பிற்போடும் நடவடிக்கையில் தற்போதைய நிர்வாகசபை ஈடுபட்டு உள்ளதாக “அதிரடி” இணையத்துக்கு தெரிய வருகிறது.
இதேவேளை அப்படியே தற்போதைய “கொரோனா” சூழ்நிலையைக் காரணம் காட்டி கூட்டம் பின்போடப்பட்டால், பெரும்பான்மையான பொதுச்சபையினர் தனித்து சட்ட ரீதியாக பொதுச்சபையைக் கூட்டுவதெனவும், ஏனெனில் தற்போதைய சூழ்நிலையில் பிரதி வெள்ளி தோறும் பேர்ண் முருகன் ஆலயத்துக்கு பொதுச்சபைக்கு வருபவர்களை விட, பெரும்பாலானோர் வருவதாகவும், கடந்தவாரம் கூட பொதுச்சபைக்கு வருபவர்களை விட, மும்மடங்கான பொதுமக்களுடன் அதே ஆலயத்தில் திருமண வைபவம் நடைபெற்று உள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதேவேளை பேர்ண் முருகன் ஆலய விதிமுறைகளை (யாப்பு) சுவிஸ் மொழியில் இருந்து, தமிழ் மொழிக்கான “மொழிபெயர்ப்பை” சுவிஸ் அரச மொழி பெயர்ப்பு நிறுவனம் ஊடாக, பெரும்பான்மையான பொதுச்சபையினர் தனித்து (பணம் செலுத்தி) மொழி பெயர்க்க முனைந்த போது, ஆலயத்தின் தற்போதைய நிர்வாகத்தினர் தாமே பணம் செலுத்தி சட்டத்தரணி மூலம் மொழி பெயர்த்து பெற்றுள்ள போதிலும், அதனை பொதுச்சபையினருக்கு வழங்காமல், “பொதுச்சபை அன்றே வழங்குவோம்” என இழுத்தடித்து வருவதாக தெரிய வருகிறது.
ஏனெனில் அந்த யாப்பு விதியின்படி கோயில் நிர்வாகத்துக்கென தனியான வங்கிக் கணக்கும், கோயில் கட்டிட சபைக்கென தனியான வங்கிக் கணக்கும் இருக்க வேண்டுமெனவும், ஆயினும் காணிக் கட்டிட வங்கிக் கணக்கிலேயே அனைத்து விடயங்களும் நடந்து உள்ளதாகவும், அதில் பல குளறுபடிகள் நடந்து உள்ளதாகவும், இதுபோன்ற பல குறைபாடுகள், முறைகேடுகள் உள்ளதாகவும் “பொதுச்சபையை” சேர்ந்த பலர் “அதிரடி” இணையத்துக்கு தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிர்வாக சபையினரால் “பொருளாளர் உட்பட கணக்காய்வாளர்கள் மூவர் இடைநிறுத்தப்பட்டதும், செயலாளர், உபதலைவர் ஆகியோர் நிர்வாகசபையில் இருந்து வெளியேறியதும்” சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற நிலையில், இன்றையதினம் இடைநிறுத்தப்பட்ட கணக்காய்வாளர்களில் ஒருவரான திரு. இ.பண்பழகன் அவர்கள் பல உண்மையான விடயங்களைக் குறிப்பிட்டு வெளியிட்ட அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு முன்வைக்கிறோம்.
இதேவேளை பொதுச்சபை கூடாவிடில் பெரும்பான்மை பொதுச்சபை உறுப்பினர்களால் கூட்டப்படவுள்ள பொதுச்சபைக் கூட்டம், அதுக்கான ஏற்பாட்டுக் கலந்துரையாடல் தொடர்பான செய்திகள் “அதிரடி” இணையத்துக்கு கிடைத்ததும் பிரசுரிக்கப்படும்.
(இணைந்திருங்கள் “அதிரடி” இணையத்துடன்..)
சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் முன்னைய இந்த லிங்கை (Link) அழுத்திப் பார்க்கவும்…
http://www.athirady.com/tamil-news/category/howisthis