மத்திய பிரதேச படகு விபத்து- 3 பேரின் உடல்கள் மீட்பு..!!
மத்திய பிரதேச மாநிலம் ராய்சன் மாவட்டம், பான்ஸ்கேடா கிராமத்தின் அருகே நர்மதா நதியில் நேற்று 9 பேருடன் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர்.
6 பேர் நீந்தி பாதுகாப்பாக கரையேறினர். மீதமுள்ள 3 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. மாநில பேரிடர் மீட்பு படையின் சுமார் 50 பேர் கொண்ட குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆற்றில் மூழ்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் இன்று சடலமாக மீட்கப்பட்டனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.