சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் வெளியான தகவல் !!
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 152,109 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
டிசெம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 47,120 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.
இதேவேளை, நாட்டுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், 2022 ஆம் ஆண்டு ‘இலங்கையை காண்போம்’ என்ற ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய மேம்பாட்டுத் திட்டத்துக்கு அமைவாக இந்த பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.