பொதுமக்களின் குற்றச்சாட்டை அடுத்து அச்சுவேலி பொலிஸ் உத்தியோகஸ்தர் இடமாற்றம்.!!
யாழ்.அச்வேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது பொதுமக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் வழங்கும் முறைப்பாடுகளுக்கமைய யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகே பொலிஸ் நிலையங்களுக்கு திடீரென நோில் விஜயம் செய்து ஆய்வுகளை நடாத்துவதுடன், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் நேரடியாக கேட்டறிந்து வருகின்றார்.
இதனடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
கடமையைச் சரியாக செய்யமை, பொதுமக்களிடம் வற்புறுத்தி பணம் பெறுகின்றமை, மற்றும் தரகராக நின்று உயர் அதிகாரிகளுக்கு பணம் பெற்றுக் கொடுக்கின்றமை போன்ற முறைப்பாடுகளை தொடர்ந்து, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்.
மேலும் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் இதற்கு முன்னரும் பல முறை இடமாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரத்து செய்துவிட்டு, அச்சுவேலி பொலிஸ் நிலையத்திலேயே தொடர்ந்து பணியாற்றியதாக கூறப்படுகிறது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”