;
Athirady Tamil News

ஆந்திராவில் ரூ.45 லட்சம் கள்ள நோட்டுகளுடன் 7 பேர் கும்பல் கைது…!!

0

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ரெண்டலா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட் நாராயண ரெட்டி. விவசாயியான இவர் கள்ள நோட்டுகளை அச்சடித்து விரைவில் பணக்காரராக வேண்டும் என எண்ணினார்.

அதே பகுதியை சேர்ந்த சீனிவாச ராவ் ஏற்கனவே கள்ளநோட்டு வழக்கில் சிறைக்குச் சென்று வந்தார். அவரை தொடர்பு கொண்ட வெங்கட் நாராயண ரெட்டி கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவது குறித்து ஆலோசனை செய்தனர்.

இதையடுத்து தாடசேபள்ளி ஷேக் ஜானி பாஷாவுடன் இணைந்து நதிக்குடி கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் மிஷின் உள்ளிட்டவைகளை வைத்து கள்ளநோட்டு அச்சடித்தனர். ரூ.5 ஆயிரம் ஒரிஜினல் நோட்டுகளை கொடுத்தால் ரூ.20,000 கள்ள நோட்டுகளை தருவதாக சிலரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து குண்டூர் வெங்கட்ரமணா காலனியை சேர்ந்த அங்கம்ம ராஜி, லால் புராவை சேர்ந்த ஸ்ரீநிவாஸ், அர்ச்சன்பேட்டா வேல்பூர் கிஷோர் பிரகாசம் மாவட்டம் கண்டகர் பூர்ண சந்திர ராவ் உள்ளிட்டவர்களிடம் கள்ள நோட்டுகளை கொடுத்து புழக்கத்தில் விட்டனர்.

இவர்கள் பெட்ரோல் பங்குகள், தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கடைகள், மதுபான கடைகள் உள்ளிட்ட இடங்களில் இரவு நேரங்களில் கள்ள நோட்டுகளை கொடுத்து பொருட்களை வாங்கி புழக்கத்தில் விட்டுள்ளனர்.

கடந்த 22-ந்தேதி பேரேச்சர்லாவில் உள்ள மதுபானக் கடையில் 2 பேர் 200 ரூபாய் கள்ள நோட்டுக்களை கொடுத்து மதுபானம் வாங்கியுள்ளனர்.

கள்ள நோட்டு கும்பல் கொடுத்த பணத்தின் மீது சந்தேகமடைந்த கடைக்காரர்கள் இதுகுறித்து மெடிகொண்டுர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கள்ள நோட்டு மதுபானம் வாங்கிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நதிகுடி கிராமத்தில் கள்ள நோட்டுகள் அச்சடிப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து நதிகுடி கிராமத்துக்கு சென்ற போலீசார் அங்கிருந்த வெங்கட்நாராயண ரெட்டி, சீனிவாச ராவ், ஷேக் ஜானிபாஷா உட்பட 7 பேரை கைது செய்தனர்.

கள்ள நோட்டு கும்பல் கடந்த 6 மாதமாக ரூ.2.20 லட்சம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.45.05 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டுகள் தயாரிப்பதற்காக வைத்திருந்த கலர் ஜெராக்ஸ், மிஷின் கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.