உலகின் இரண்டாவது பெரிய ஸ்டார்ட் அப் மையம் இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம்…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் 54வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட அளவில் மட்டுமே மாணவர்கள் பேராசிரியர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
கான்பூர் ஐ.ஐ.டி.யில் பட்டமளிப்பு விழா
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
கான்பூர் ஐ.ஐ.டி.யில் நீங்கள் சேர்ந்தபோது உங்களுக்கு ஒரு வித பயம் இருந்திருக்கும். தற்போது உங்களை அதிலிருந்து வெளியேற்றி ஒரு பெரிய நம்பிக்கையை உங்களுக்கு ஐ.ஐ.டி. வழங்கியுள்ளது. உலகம் முழுவதையும் ஆராய்வதற்கான நம்பிக்கையை உங்களுக்கு அது வழங்கி உள்ளது.
செயற்கை நுண்ணறிவை உருவாக்குங்கள், ஆனால் மனித நுண்ணறிவுடன் தொடர்பை இழக்காதீர்கள். குறியீட்டு முறையைத் தொடருங்கள், ஆனால் மனிதத் தொடர்பை இழக்காதீர்கள்.
சுதந்திரம் பெற்ற இந்த 75வது ஆண்டில், 75க்கும் மேற்பட்ட யூனிகார்ன்கள், 50,000க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப்கள் உள்ளன. இதில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 10,000 பேர் வந்துள்ளனர். இன்று இந்தியா உலக அளவில் இரண்டாவது பெரிய ஸ்டார்ப் – அப் மையமாக திகழ்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி தமது பேச்சின்போது குறிப்பிட்டார்.