;
Athirady Tamil News

ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தல்: 12 நாடுகளுக்கு பயணத்தடை விதித்தது ஈரான்..!!

0

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் நுழைந்து விட்டது.

அந்த வகையில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடான ஈரானில் கடந்த 19-ந்தேதி, ஒமைக்ரான் கால் பதித்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி அங்கு ஒமைக்ரான் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆக உள்ளது.

இந்த நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 8 ஆப்பிரிக்க நாடுகளுக்கும், இங்கிலாந்து, பிரான்ஸ், நார்வே மற்றும் டென்மார்க் ஆகிய 4 நாடுகளுக்கும் ஈரான் பயணத்தடை விதித்துள்ளது.

இந்த 12 நாடுகளில் இருந்து வருபவர்கள் ஈரானில் நுழைவதற்கு 15 நாட்களுக்கு தடைவிதிக்கப்படுவதாக ஈரான் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடைவிதிக்கப்பட்ட நாடுகளை தவிர்த்து பிற நாடுகளில் இருந்து வருபவர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் மற்றும் கொரோனா ‘நெகடிவ்’ சான்றிதழை சமர்பிக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.