EDUS நிறுவனத்தின் ஓராண்டு நிறைவு விழாவும் , விருது வழங்கும் நிகழ்வும்!! (படங்கள்)
EDUS நிறுவனத்தின் ஓராண்டு நிறைவு விழாவும் , விருது வழங்கும் நிகழ்வும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
நேற்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் , யாழ்.போதனா வைத்திய சாலை பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.ஸ்ரீ பவானந்தராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக மங்களா காட்சியறை உ=உரிமையாளரான கே.ஜெயந்தன் கலந்து கொண்டார். சிறப்பு பேச்சாளராக யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியர் எஸ்.வினோத்குமார் கலந்து கொண்டிருந்தார்.
குறித்த நிறுவனத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி , நிறுவனத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும் , இணையத்தள அங்குரார்ப்பன நிகழ்வும் இன்றைய தினம் நடைபெற்றது.
edus.lk எனும் இணையத்தளம் மூலம், ஒன்லைன் ஊடாக ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு தமிழ் மொழி மூலம் ஊடாகவும் , இடைநிலை மற்றும் உயர்தர மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம் வகுப்புக்களை நடாத்தி வருவதுடன் , பாடசாலை கல்வியை முடித்த மாணவர்களுக்கான கற்கை நெறிகளையும் நடாத்தி வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”