கடந்த ஆண்டு 601 பேரின் உயிரை காப்பாற்றிய ரெயில்வே போலீசார்…!!
ரெயில்வே போலீசார், கடந்த 2021ம் ஆண்டில் 601 உயிர்களை காப்பாற்றி உள்ளனர். அவர்கள், 4 ஆண்டுகளில் 1,650 பேரின் உயிரை இதுவரை காப்பாற்றியுள்ளனர் என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரெயில்வே அமைச்சகம் சார்பில் வெளியான அறிக்கையில் கூறியதாவது:
புகார் தெரிவிக்கவும், தேவைக்காகவும் ரெயில்வே உதவி எண் 139-க்கு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பணியில் இருந்த 26 ஆர்பிஎப் போலீசார் உயிரிழந்துள்ளனர்.
கடத்தல்காரர்களிடம் இருந்து 54 பெண்கள், 94 சிறுமிகள், 81 ஆண்கள் மற்றும் 401 சிறுவர்கள் என மொத்தம் 630 பேரை ரெயில்வே போலீசார் காப்பாற்றி உள்ளனர்.
கடந்த 2021-ம் ஆண்டில் போதை பொருள் கடத்தல்காரர்கள் 620 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.15.7 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கிறது.