பெற்ற குழந்தை என்றுகூட பாராமல் கணவன்-மனைவி செய்த கொடூர செயல்…!!
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து குஜராத்தின் ராஜ்கோட் நோக்கி சென்ற ரெயிலில் ஒரு கணவன்-மனைவி கைக்குழந்தையுடன் பயணம் செய்துள்ளனர். அந்த குழந்தை வெகுநேரமாகியும் எந்த அசைவும் இல்லாமல் இருந்ததால், அந்த தம்பதியர் மீது மற்ற பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவிக்க, அவர் ரெயில்வே போலீசுக்கு தகவல் அளித்தார்.
ரெயில் மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் ரெயில் நிலையத்தை அடைந்ததும், குழந்தையுடன் அந்த தம்பதியரை கீழே இறக்கினர். குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை இறந்து வெகுநேரம் ஆனது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், பிறந்து 16 மாதங்களே ஆன அந்த பெண் குழந்தை, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது.
பெற்ற குழந்தை என்றும் பாராமல் குழந்தையின் தந்தையே இந்த கொடூரத்தை செய்துள்ளார். அதற்கு தாயும் உடந்தையாக இருந்துள்ளார். பின்னர் குழந்தையின் உடலை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று சொந்த ஊரில் அடக்கம் செய்யும் நோக்கத்தில் ரெயிலில் பயணம் செய்தபோது சிக்கி உள்ளனர். கணவன், மனைவி இருவரையும் சோலாப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.