கடன் தரவில்லை என வங்கிக்கு தீ வைத்த நபர்- கர்நாடகாவில் பரபரப்பு…!!
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் வசிம் முல்லா. 33 வயதாகும் இவர் ஹெடிகொன்டா கிராமத்தில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் லோன் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இவரது விண்ணப்பத்தை பரிசீலித்த வங்கி மேலாளர் கடன் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வசிம் முல்லா, வங்கி கண்ணாடிகளை உடைத்து வங்கிக்குள் நுழைந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
இதனால் வங்கியில் இருந்த பெரும்பாலான பொருட்கள், பத்திரங்கள் தீக்கிரையாகின. பொதுமக்கள் வருவதை பார்த்துவிட்டு தப்பி ஓட முயற்சி செய்த முல்லாவை அப்பகுதியினர் பிடித்து, அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் தற்போது முல்லா மீது காகிநல்லி காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 436, 477 மற்றும் 435 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.