மெக்சிகோவில் நுழைந்தது ‘புளோரோனா’: 3 பேருக்கு தொற்று உறுதி…!!
உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ், ‘டெல்டா, காமா, ஒமைக்ரான்’ என பல வடிவங்களில் உலகை ஆட்டிப் படைத்து வரும் சூழலில், கொரோனா வைரசுடன், ‘இன்புளுயன்சா’ எனப்படும் குளிர் காய்ச்சலை உண்டு பண்ணும் வைரசும் இணைந்து, ‘புளோரோனா’ என்ற புதிய வைரஸ் அண்மையில் உருவானது.
உலகில் முதல் முறையாக இஸ்ரேல் நாட்டில் கர்ப்பிணி ஒருவருக்கு ‘புளோரோனா’ வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த ‘புளோரோனா’ வைரஸ் தற்போது லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவில் நுழைந்துவிட்டது. அந்த நாட்டின் நயாரிட் மற்றும் ஜலிஸ்கோ மாகாணங்களில் 28 வயது இளம்பெண் உள்பட 3 பேருக்கு ‘புளோரோனா’ வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.