அமரர் மாணிக்கதாசன் பிறந்தநாளில், கிளிநொச்சியில் “கல்விக்கு கரம் கொடுப்போம்” (வீடியோ, படங்கள்)
அமரர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்த நாளில் கிளிநொச்சியில் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சித் திட்டம்.
######################################
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உப தலைவரும், இராணுவத் தளபதியுமான தாஸ் அண்ணர் அன்றில் கண்ணாடி என அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்தநாள் நிகழ்வினை முன்னிட்டு, “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தாயக கிராமத்தில் பலவேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒரு நிகழ்வாக கிளிநொச்சி ஊற்றுப்புலம் மற்றும் கோணாவில் கிராமங்களில் வாழும் பெற்றோர் இல்லாத, தந்தை இல்லாத, வறிய நிலையில் வாழும் மாணவ மாணவிகளுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒழுங்கமைப்பில் கல்விக்கு கரம் கொடுப்போம்” நிகழ்ச்சித் திட்டத்தின் வயிலாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகிய “கல்விக்கு கரம் கொடுப்போம்” நிகழ்ச்சித் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவியர்கள் வருகை தந்திருந்தனர். மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் செயலாளர் திரு.மாணிக்கம்ஜெகன் முன்னிலையில், புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளருமான தோழர் இராஜா அவர்கள், புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான கௌரவ சுந்தலிங்கம் காண்டீபன் அவர்கள், புளொட் அமைப்பின் தோழர் கரன், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” வவுனியா மாவட்ட அமைப்பாளர் திரு பெருமாள் சஞ்சீவன், மற்றும் கிராமிய இணைப்பாளர் திருமதி சுபாசினி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
தாயக மக்களின் சுதந்திர வாழ்வுக்காக தமது இளமைக் காலத்தை சுதந்திர போராட்டத்தில் இணைந்து தம்முயிரை இந்த மண்ணுக்கும் மக்கள் சுக வாழ்வுக்கும் அர்ப்பணித்த வீரபுருசர்களை நாம் வணங்குவோம்ம் தாம் உயிரோடு வாழ்ந்த காலத்தில் எதற்காக போராடினார்களோ, அதை தாம் இறந்த பின்னும் தாம் உயிருக்குயிராக நேசித்த இந்த மக்கள் பெற வேண்டும் என்பதற்காக “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” வாழ்வாதார மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற நிகழ்ச்சித் திட்டங்கள் வழியாக தம் எண்ணத்தை நிறைவேற்றி வருகின்றனர்.
அந்தவகையில் தான் இன்றைய நிகழ்வும் கல்வி வசதிகளில் உள்ள தடைகளை உடைத்து மாணவர்களை தலை நிமிரச் செய்யும் கல்விப்பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”.
புலம்பெயர்ந்து வாழும் புளொட் இயக்கத்தின் தோழர்களின் நிதிப் பங்களிப்பில் பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டது.
§§§ நிதிப் பங்களித்தோர் விபரம் §§§
வவுனியாவைச் சேர்ந்தவரும், புளொட் தளபதி மாணிக்கதாசன் அவர்களது மைத்துனரும், புளொட் பிரித்தானியாக் கிளையின் தோழருமான முகுந்தன் எனும் முத்துராஜா முகுந்தன், வவுனியாவைச் சேர்ந்தவரும், “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” நிர்வாக சபை உறுப்பினரும், புளொட் அமெரிக்கக் கிளையின் பொறுப்பாளருமான தோழர்.கோபி;..
கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளைத் தோழர்கள், ஆதரவாளர்களான..-யாழ். வசாவிளானைச் சேர்ந்தவரும், சுவிஸ் கிளாரசில் வசிப்பவருமான தோழர்.தேவண்ணர் எனும் செல்லத்துரை தவராஜா; யாழ்.வீமன்காமம் தெல்லிப்பளையைச் சேர்ந்தவரும், சுவிஸ் செங்காலனில் வசிப்பவருமான தோழர்.அசோக் எனும் அசோகராஜா; வன்னியைச் சேர்ந்தவரும், சுவிஸ் சூறிச்சில் வசிப்பவருமான தோழர்.பிரபா எனும் கருணாகரன், யாழ்.சரவணையைச் சேர்ந்தவரும், சுவிஸ் சூறிச்சில் வசிப்பவருமான தோழர்.பாபு எனும் சித்திரவேல்;
யாழ்.புங்குடுதீவை சேர்ந்தவரும், சுவிஸ் பேர்ண் ஒபேர்புர்க்கில் வசிப்பவருமான தோழர்.குமார் எனும் கிருஷ்ணகுமார்; யாழ்.சரவணையைச் சேர்ந்தவரும், சுவிஸ் பேர்னில் வசிப்பவருமான தோழர்.சிவா எனும் அம்பிகாபதி கலைச்செல்வம்; வவுனியாவைச் சேர்ந்தவரும், சுவிஸ் பேர்னில் வசிப்பவருமான தோழர்.தயா எனும் கந்தவேலு தயாபரன்; யாழ்.புங்குடுதீவை சேர்ந்தவரும், சுவிஸ் பேர்ண் ரூபனக்த்தில் வசிப்பவருமான தோழர்.குழந்தை எனும் கைலாசநாதன்,
யாழ். கல்வியங்காட்டை சேர்ந்தவரும், சுவிஸ் சூறிச்சில் வசிப்பவருமான தோழர்.அன்ரன் எனும் “பரிசுத்த மூப்பர் பிலிப்” ஆகிய திரு.லோகராஜா; யாழ்.சரவணையைச் சேர்ந்தவரும், சுவிஸ் சார்கன்ஸில் வசிப்பவருமான தோழர்.மோகன் எனும் பற்பநாதன் அருட்சோதி; யாழ்.சாவகச்சேரியைச் சேர்ந்தவரும், சுவிஸ் சொலத்தூணில் வசிப்பவருமான தோழர் லெனின் எனும் செல்வபாலன்,
திருகோணமலை சம்பூரைச் சேர்ந்தவரும் சுவிஸ் சூறிச்சில் வசிப்பவருமான தோழர்.புவி; வவுனியாவைச் சேர்ந்தவரும், “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” நிர்வாக சபை உறுப்பினரும், சுவிஸ் ரப்பேர்ஸ்விலில் வசிப்பவருமான தோழர்.ரமணன் எனும் றுஷாந்த்; புங்குடுதீவை சேர்ந்த புளொட் தோழர் சுவிஸ்ரஞ்சன்; ஆகியோர் நிதிப் பங்களிப்பை வழங்கி இச்செயற்பாட்டுக்கு உதவி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது “கல்விக்கு கரம் கொடுப்போம், மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்” திட்டமானது, புளொட் உபதலைவர் அமரர் மாணிக்கதாசனின் ஜனனதினமான ஜனவரி 14 முதல், புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் ஜனனதினம் (பிப்ரவரி 18) வரை தொடர்ச்சியாக நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நம் நிகழ்வுக்கு வருகை தந்தோரால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு மாலை 5 மணியளவில் நிகழ்வு நிறைவானது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
16.01.2022
அமரர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்தநாளில் கிளிநொச்சியில் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1