ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பணிப்பாளர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருடன் விஷேட சந்திப்பு.!! (படங்கள்)
இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பணிப்பாளர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருடன் விஷேட சந்திப்பு.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு இன்றைய தினம் (31.01.2021) காலை விஜயம் செய்த இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பணிப்பாளர் Mr.Robert Juham அவர்கள் மாவட்டச் செயலாளர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களை மாவட்டச் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்டத்தின் சமகால அபிவிருத்தி , சமூக பொருளாதார நிலைமைகள் பற்றி கேட்டறிந்ததுடன்,
மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் தற்போதுள்ள நிலைமைகள் மற்றும் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி) மற்றும் UNDP நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”