போராட்டக்களத்திற்கு சென்ற சுமந்திரனும், சாணக்கியனும்!! (படங்கள், வீடியோ)
தமிழக மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரனும், இரா.சாணக்கியனும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
யாழ்.குடா நாட்டின் கரையோர பகுதிகள் முற்றாக முடங்கியுள்ளதுடன் யாழ்.மாநகரிலும் ஆதரவு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களுக்கு நிரந்தரமான தீர்வு மற்றும் வடமராட்சி கிழக்கு கடலில் இடம்பெற்ற மீனவர்கள் உயிரிழப்புக்கு நீதி ஆகியவற்றை கோரி தொடங்கப்பட்ட போராட்டம் 4வது நாளாக இன்றும் முழு வீச்சுடன் இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையிலேயே பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரனும், இரா.சாணக்கியனும் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
அதிகாரிகள் எழுத்து மூலமாக தரும் வரை தமது போராட்டம் தொடரும்!! (வீடியோ)
பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்!! (படங்கள், வீடியோ)
வடமராட்சி கிழக்கு மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!! (படங்கள், வீடியோ)
தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது.!! (வீடியோ, படங்கள்)