நாடு முழுவதும் 11 மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன: மத்திய கல்வி அமைச்சகம் தகவல்…!!
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த மாதம் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டன. ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், நாடு முழுவதும் 11 மாநிலங்களில் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன, 16 மாநிலங்களில் உயர் வகுப்புகளுக்கு மட்டும் திறக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது மாநிலங்களில் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அனைத்து மாநிலங்களிலும் குறைந்தபட்சம் 95 சதவீத ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும்,சில மாநிலங்களில் பள்ளிகளில் உள்ள ஊழியர்களுக்கு 100 சதவீத தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி போடுவது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் கடந்த டிசம்பரில் மாநிலங்களுக்கு திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கியதாகவும், பெற்றோரின் சம்மதத்தைக் கேட்பது தொடர்பாக மாநிலங்கள் முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டதாகவும் மத்திய கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஸ்வீட்டி சாங்சன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.