;
Athirady Tamil News

பெண்கள் வட்டத்திற்கான அலுவலகம் திறந்துவைப்பு!!! (படங்கள்)

0

“எழுச்சியின்கரங்கள்” பெண்கள் வட்டத்தின் அலுவலகதிறப்புவிழாவும்,இரண்டாம் ஆண்டு விழா நிகழ்வும் வவுனியா சிதம்பரநகர் பகுதியில் இன்று (6) மாலை
இடம்பெற்றது.

பெண்கள் வட்டத்தின் தலைவர் வி. லோகேஸ்வரி, தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக வவுனியா உதவிப்பிரதேசசெயலாளர் பிரியதர்சினி சஜீவன் கலந்துகொண்டார்.

மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் பெண்கள் வடத்திற்கான புதிய கட்டிடத்தை உதவிப்பிரதேச செயலாளர் நாடாவெட்டி உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
அதனைத்தொடர்ந்து பட்டிமன்றம்,கவிதா நிகழ்வு,போன்ற கலைநிகழ்வுகளுடன் பரிசளிப்பும் இடம்பெற்றது.

நிகழ்வில் தமிழ்மணி மேழிக்குமரன், தமிழருவி சிவகுமாரன், கிராமசேவையாளர் பா.ஜனகன், பெண்கள் சிறுவர்கள் எனபலர் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.