லக்ஷமன் கிரியெல்லவின் கேள்வியால் தடுமாறிய நாமல் !!
நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவந்த சட்டங்களின்படியே ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து வரி அறிவிடப்படுவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ஷவின் இக்கருத்தால் சபையில் நேற்று (09) நாமலுக்கும் லக்ஷமன் கிரியெல்லவுக்கும் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதன்போது உரையாற்றிய நாமல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் கொண்டுவரப்பட்ட இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்கள சட்டங்கள் தற்போது அமுலில் இல்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள சட்டங்கள் திருத்தப்பட்டன. இதன்படியே ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து வரி அறிவிடப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதன்போது குறுக்கீடு லக்ஷமன் கிரியெல்ல நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவந்த சட்டத்தின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து வரி அறிவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது என நாமல் கூறுகிறார். இறைவரித் திணைக்கள சட்டத்தின் எத்தனையாவது உறுப்புரையில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது என நாமல் கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
எனினும் நாமல் ராஜபக்ஷ எத்தனையாவது உறுப்புரை என்று சபைக்கு அறிவிக்கவில்லை. மாறாக, எத்தனையாவது உறுப்புரை என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன நாளை சபைக்கு அறிவிப்பார் என கூறினார்.