;
Athirady Tamil News

’சட்டவிரோத மீன்பிடிக்குப் பாதுகாப்புத் தரப்பினர் உதவுகிறார்கள்’ !!

0

வடக்குக், கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை இல்லாதொழிக்கும் வகையில் நாட்டின் ஏனையப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் வடக்குக், கிழக்குக் கடற் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை ஈடுபடுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், வடக்குக், கிழக்கைச் சேராத உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரின் உதவியுடன் வடக்குக், கிழக்குக் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவர்கள் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபடுவதோடு, வடக்குக் கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை இல்லாதொழிக்கும் வகையிலும் செயற்படுகின்றனர் என்றார்.

தமிழ் நாடு மீனவர்கள் வடக்குக் கிழக்கில் தொடர்ந்து அத்துமீறி மீன் பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பில் நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். இந்த நிலைமை மோசடைய வேண்டுமென அரசாங்கம் வேண்டுமென்றே இதனை அனுமதிக்கிறது. இந்த விடயத்தில் அரசாங்கத்தை நாம் நேரடியாகவே குற்றம் சாட்டுகிறோம் எனவும் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு வந்தவரே கடற்றொழில் அமைச்சராக இருக்கிறார். அவர் இருக்கும்போதே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.