சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவரை தேடும் புலனாய்வாளர்கள்.!!
சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவரை தேடி புலனாய்வாளர்களும் தம்மை அடையாளப்படுத்தாத வாள்வெட்டு ரவுடிக்கும்பலும் தேடுதல் வேடடையில்.
மேட்படி விடயம் தொடர்பாக உறுதிப்படுத்தப்படட தகவலின் படி 2ஆம் குறுக்குத்தெரு சின்னக்கடை யாழ்பாணத்தினை பிறப்பிடமாக கொண்ட ஸ்டிவின்சன் சந்துரு என்னும் நபரே இவ்வாறு சுவிஸ் நாட்டில் இருந்து நாடுதிரும்பினார் எனவும்.
அவர் போரின் இறுதி காலங்களில் விடுதலைப்புலிகளுக்கு பொருட்களை கடத்தவும் விடுதலை புலிகளின் உறுப்பினர்களை
இந்தியாவுக்கு கடத்தவும் உதவினார் என்னும் குற்றச்சாட்டில் கடத்தப்பட்டு நிபந்தனையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட்டபோதிலும் இராணுவம் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கு ஒத்துழைப்பு ஏதும் வழங்காமல் இருந்தபோது தேடப்பட்டு வந்த நபரவர். இவர் நாடடைவிட்டு வெளியேறிய பின்னரும் இலங்கை நாட்டின் இறைமைக்கு எதிராகவும் விடுதலை புலி களுக்கு ஆதரவாகவும் பலபோராட்ட்ங்களிலும் பரப்புரைகளில் ஈடுபட்டு வந்ததுடன் விடுதலை புலிகளை மீளுருவாக்கம் செய்வோரோடும் தடைசெய்யப்படட சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள நபர்களுடன் இணைந்து செயற்பட்டார்.
அத்துடன் இவரது முகநூல் பதிவுகள் தொடர்ந்தும் அரச புலனாய்வாளர்களால் கண்கணிக்கப்பட்டுவந்த நிலையில். அவரை சுவிஸ் அரசாங்கம்
நாடுகடத்தியதாகவும் அவர் வீடு திரும்பிய செய்தி அறிந்து அவரை தேடி இராணுவ மற்றும் புலனாய்வாளர்களும் தம்மை அடையாளப்படுத்தத ரவுடி கும்பலை சேர்ந்தவர்களும் 17.02.2022அன்று இரவு தொடக்கம் இரவிரவாக அவரது வீட்டுக்கு சென்று அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு பெற்றோரை வற்புறுத்தி மிரட்டி சென்றதாக அறியப்படுகிறது.