பதுளை மாவட்டத்தில் இதுவரை 600 கொவிட் மரணங்கள் !!
பதுளை மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றினால் மரணமாகியவர்களின் எண்ணிக்கை அறுநூறை (600) தாண்டியுள்ளதாக பதுளை மாவட்ட செயலகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
கொவிட் 19 தொற்றினால் கடந்த ஐந்து தினங்களில் பதுளை மாவட்டத்தில் ஏழு மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
இந் நிலையில் ஆரம்பம் முதல் 19-02-2022 வரையிலான காலப்பகுதியில் கொவிட் தொற்றினால் சிகிச்சை பயனின்றி 604 பேர், பதுளை மாவட்டத்தில் மரணமாகியுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் பதுளை மாவட்டத்தின் 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் நான்கு மரணங்கள் இடம்பெற்றுள்ளதுடன், 106 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக, பதுளை மாவட்ட சுகாதாரப் பணியகம் தெரிவித்துள்ளது.
பதுளை மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் இன்று விடுத்துள்ள கொவிட் 19 தொடர்பான அறிக்கையில் கோவிட் 19 தொற்றினால் 604 பேர் மரணமாகியுள்ளனர். இதற்கமைய பதுளை – 77 பேர், பண்டாரவளை – 76 பேர், எல்ல – 15 பேர், ஹல்துமுள்ளை – 24 பேர், ஹாலி-எலை – 58 பேர், அப்புத்தளை – 43 பேர், கந்தகெட்டிய – 8 பேர், லுணுகலை – 18 பேர், மகியங்கனை – 76 பேர், மீகாகியுல -17 பேர், பசறை – 40 பேர், ரிதிமாலியத்தை – 20 பேர், சொரணாதொட்டை – 12 பேர், ஊவா – பரணகமை – 40 பேர், வெலிமடை – 80 பேர் என்ற வகையில் 604 பேர் மரணமாகியுள்ளனர். இம் மரணங்கள் அவ்வப் பிரதேச செயலகப் பிரிவுகளின் மயானத்தில் சுகாதார விதிமுறைகளுக்கமைய தகனங்கள் செய்யப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட மரணங்களும், தொற்றாளர்களும் சடுதியாக அதிகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கொவிட் 19 சுகாதார வழிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றுமாறு, அவ்வப்பகுதி பொது சுகாதாரப் பரிசோதகர்கள், பொதுமக்களை தெளிவுப்படுத்தியும் வருகின்றனர்.