போதையை அறிய புதிய கருவி !!
மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களை அடையாளம் காண பொலிஸார் புதிய கருவியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வாகனம் செலுத்தும் போது அறியாமை, தொலைபேசி பாவனை, அதிவேகமாக வாகனம் செலுத்துதல், குடிபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் வாகனக் குறைபாடுகளைப் புறக்கணித்தல் உள்ளிட்ட ஒழுக்கமற்ற ஓட்டுநர்களே பெரும்பாலான வீதி விபத்துகளுக்கு முக்கிய காரணம் என்று புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன என்று அவர் வலியுறுத்தினார்.
மோட்டார் சைக்கிள் சாரதிகள், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பாதசாரிகள் போன்றோர் விபத்தின் பின்விளைவுகளை அனுபவிக்க வேண்டிய பிரதான தரப்பினர் என தெரிவித்தார்.