தேசிய பாதுகாப்பில் அருணாச்சல பிரதேசம் முக்கிய பங்கு வகிக்கிறது – பிரதமர் மோடி உறுதி….!!
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், அருணாசல பிரதேசமும் 1987 ஆண்டு மாநில அந்தஸ்தை பெற்றன.
இரு மாநிலங்களிலும் இன்று மாநில தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
தேசிய முன்னேற்றத்திற்கு மிசோரமின் பங்களிப்புகளில் இந்தியா பெருமிதம் கொள்கிறது, மிசோரம் மக்களின் நல்ல ஆரோக்கியம் மற்றும்நல்வாழ்வுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அருணாச்சலப் பிரதேச மக்கள் அசாத்திய திறமை மற்றும் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். வரும் காலங்களில் அம்மாநிலம் வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டும்.
21ஆம் நூற்றாண்டில் நாட்டின் வளர்ச்சியில் வட கிழக்கு மாநிலங்களில் முக்கிய பங்காற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அருணாச்சல பிரதேசத்தை கிழக்கு ஆசியாவின் முக்கிய நுழைவாயிலாக மாற்றுவதற்கு நாங்கள் உழைத்து வருகிறோம்.
அந்த மாநிலத்தில் நவீன உள்கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தேசிய பாதுகாப்பில் அருணாச்சலத்தின் பங்களிப்பு முக்கியமானது. இவ்வாறு
பிரதமர் மோடி தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.