மன்னாரில் பறந்த ட்ரோன்; விசாரணைகள் ஆரம்பம் !!
மன்னார், வங்காலை சரணாலயத்தை அண்மித்த பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் கமெரா பறக்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களை, சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின் விதிகளின்படி அங்கீகரிக்கப்படாத ஆளில்லா விமானச் செயல்பாடுகள் (ட்ரோன்) தண்டனைக்குறிய குற்றமாகும்.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்குள் நடத்தப்படும் அனைத்து ஆளில்லா விமான நடவடிக்கைகளுக்கும் (ட்ரோன்) சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவிடமிருந்து அனுமதி பெறப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.