வேலணை – புங்குடுதீவு – இறுப்பிட்டி பகுதி மக்களின் நலன்கருதி புதிய பேருந்து சேவை!! (படங்கள்)
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து வேலணை – புங்குடுதீவு – இறுப்பிட்டி பகுதி மக்களின் நலன்கருதி புதிய பேருந்து சேவை ஒன்று இன்றையதினம் இலங்கை போக்குவரத்து சபையால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதி மக்களின் அவசிய தேவை கருதியதான கோரிக்கையை ஏற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கைப் போக்குவரத்து சபையின் வடபிராந்திய பொது முகாமையாளர் குணபால செல்வத்துடன் குறித்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடிப்பட்டிருந்தது.
இதற்கிணங்க குறித் பகுதிக்கான சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வடபிராந்திய பொது முகாமையாளர் குணபால செல்வம் தெரிவித்திருந்தமைக்கு இணங்க இன்றையதினம் குறித்த பேருந்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் மருதயினார் ஜெயகாந்தன் உள்ளிட்டவர்களின் பிரசன்னத்துடன் குறித்த சேவை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த சேவையானது புங்குடுதீவு பெருங்காட்டு சந்தியூடாக இறுப்பிட்டி கேரதீவு மடத்துவெளியை சென்றடைந்து யாழ்ப்பாணத்துக்கான சேவையை முன்னெடுக்கவுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”