இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 14,148 பேருக்கு தொற்று…!!
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது.
இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 5,023 , மகாராஷ்டிராவில் 1,151 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 81 ஆயிரத்து 179 ஆக உயர்ந்தது.
தினசரி பாதிப்பு விகிதம் 1.22 சதவீதமாகவும், வாரந்திர பாதிப்பு விகிதம் 1.60 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது.
புதிய பாதிப்பை விட தொற்றின் பிடியில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை நேற்று இருமடங்கிற்கும் மேல் இருந்தது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 30,009 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.
இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 22 லட்சத்து 19 ஆயிரத்து 896 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 1,48,359 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 16,163 குறைவு ஆகும்.
கொரோனா பாதிப்பால் மேலும் 302 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 188 பேர் அடங்குவர்.
நாட்டில் இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,12,924 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,43,656, கேரளாவில் 64,591 பேர் அடங்குவர்.
நாடு முழுவதும் நேற்று 30,49,988 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 176.52 கோடியை கடந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் படி இதுவரை 76.35 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 11,55,147 மாதிரிகள் அடங்கும்.