படைகளை திரும்பப் பெறுங்கள்: புதினுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள்…!!
உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற சூழ்நிலையில், இன்று காலை ராணுவ தாக்குதலுக்கு புதின் உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷியா ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது.
குறிப்பாக உக்ரைனின் கிழக்கு பகுதிகளை குறிவைத்து ரஷியா ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கிழக்கு பகுதிதான் எங்களது இலக்கு. உக்ரைன் எங்களது இலக்கு அல்ல என புதின் அறிவித்துள்ளார். உக்ரைன் படைகள் தங்களது ஆயுதங்களை கீழே போட வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.
ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ஐ.நா. பொதுச்சபை இன்று காலை அவசரமாக கூடியது. அதன்பின் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் கூறுகையில் ‘‘ரஷிய அதிபர் புதின், மனிதநேயத்தின் அடிப்படையில் படைகளை ரஷியாவுக்கு திரும்ப பெற வேண்டும். அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும்.
மனிதநேயத்தின் பேரில் நூற்றாண்டு தொடக்த்தில் இருந்து, இது ஐரோப்பிய கண்டத்தில் மிகவும் மோசமான போருக்கு அனுமதிக்கக் கூடாது. இந்த மோதலை நிறுத்த வேண்டும்’’ என புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.