புடினை தடுக்க முடியாது.. மொத்த உலகிற்கும் தலைமை ஏற்க போகும் ரஷ்யா.. பாபா வங்காவின் பரபரப்பு கணிப்பு! (படங்கள்)
ரஷ்யா உக்ரைன் போர் உச்சம் அடைந்து உள்ள நிலையில் பாபா வங்கா ரஷ்யா பற்றி வெளியிட்ட கணிப்பு ஒன்று வைரலாகி வருகிறது.
உலக நிகழ்வுகள் பலவற்றை பற்றி கணிப்புகளை வெளியிட்டவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நாஸ்டர்டாமஸ். அதேபோல் பெண் நாஸ்டர்டாமஸ் என்று அழைக்கப்படுபவர்தான் பாபா வாங்கா. பல்கேரியாவை சேர்ந்த மூதாட்டி பாபா வங்கா. இவர் 1996லேயே இறந்துவிட்டார். பல்கேரியாவில் ஏற்பட்ட பெரும் புயல் வெள்ளத்தில் பாபா வங்காவின் கண்களில் மின்னல் தாக்கி அவருக்கு பார்வை பறிபோனது. இவருக்கு 13 வயதில் பார்வை பறிபோன போது விசித்திர சக்தி வந்ததாக நம்பப்படுகிறது.
சக்தி
அதாவது இவரின் கண்களுக்குள் எதிர்கால சம்பவங்கள் அவ்வப்போது காட்சியாக தெரிந்துள்ளது. எதிர்காலத்தில் எந்த வருடத்தில் என்ன நடக்கும் என்பது இவருக்கு தினமும் காட்சிகளாக வந்துள்ளதாம். இதைத்தான் இவர் கணிப்புகளாக எழுதி உள்ளார். இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அவர் இறக்கும் முன்பே கணிப்புகளை எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளார். உலகில் எப்போது என்ன நடக்கும் என்று அவர் பல்வேறு விஷயங்களை பட்டியலிட்டு சென்றார்.
கணிப்பு
சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. இவர் குறிப்பிட்ட பல விஷயங்கள் நிஜத்தில் அப்படியே நடந்து இருக்கிறது. அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றதை இவர் துல்லியமாக கணித்துள்ளார். தாய்லாந்தில் ஏற்பட்ட 2004 சுனாமி, ஜப்பான் சுனாமி ஆகியவற்றை துல்லியமாக கணித்து இருக்கிறார். அமெரிக்காவையே உலுக்கிய சம்பவம் 9/11ல் அல்கொய்தா அட்டாக். அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதை இவர் அப்படியே கணித்து இருந்தாராம்.
கணிப்பு
மேலும் இளவரசி டயானா மரணத்தை இவர் துல்லியமாக கணித்து இருக்கிறார். இதெல்லாம் போக சோவியத் யூனியன் உடைந்தது பற்றியும் ஏற்கனவே இவர் கணித்து உள்ளாராம். இந்த நிலையில்தான் தற்போது ரஷ்யா பற்றியும் பாபா வங்கா கணிப்பு வெளியிட்டு இருக்கிறார். உக்ரைனில் தற்போது போர் தீவிரமாக நடந்து வருகிறது. ஏவுகணைகள், பீரங்கிகள், குண்டுகள் மூலம் ரஷ்யா தாக்கி வருகிறது. இரண்டு நாட்களாக நடைபெற்ற போர் இன்று உச்சம் தொட்டுள்ளது.
ரஷ்யா போர்
அங்கு ரஷ்யா கடுமையான வான்வெளி, ராணுவ தாக்குதல்களை நடத்தி வருகிறது.உக்ரைனின் தலைநகர் கீவ் இன்னும் சில நாட்களில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஷ்யாவை தடுக்க முடியாது என்று பாபா வங்கா கணித்துள்ளதாக daily mail உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. அதாவது ரஷ்யா இந்த உலகிற்கே கடவுள் போன்ற நாடாக உருவெடுக்கும். ரஷ்யாவின் போர் காரணமாக ஐரோப்பா ஒன்றுமே இல்லாத மோசமான வெற்று நிலப்பரப்பாக மாறும்.
ரஷ்யா பவர்புல்
உலகில் எல்லா நாடுகளுக்கும் பிரச்சனை வந்தாலும். ஒரு நாட்டை மட்டும் யாராலும் தொட முடியாது. அந்த நாடு ரஷ்யா. அது விளாடிமருக்கு சொந்தமான ரஷ்யா. ரஷ்யாவை யாராலும் தடுக்க முடியாது. ரஷ்யாவை தடுக்க நினைத்து ரஷ்யாவின் பாதையில் இருக்கும் நாடுகள் எல்லாம் நீக்கப்படும். ரஷ்யா உலகிற்கே தலைமை ஏற்க போகிறது, என்று பாபா வங்கா குறிப்பிட்டுள்ளதாக இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான பாபா வங்காவின் கணிப்புகள் உண்மையில் நடந்து உள்ளன.
புடின் வெற்றி
ஆனாலும் அவரின் கருத்துக்கள், அவரின் கணிப்புகளை சிலர் தவறாக புரிந்துகொள்ளவும், பொருள் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதனால் ரஷ்யா பற்றி அவர் சொன்னது உண்மையில் நடக்குமா அல்லது வெறும் கட்டுக்கதையா என்பது போக போகத்தான் தெரியும். கடவுள் தனக்கு கொடுத்த சக்தி இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 5079ம் ஆண்டு உலகம் அழியும் என்றும், அது வரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்துவிட்டு மரணம் அடைந்துள்ளார்.
2022 வெள்ளம்
முன்னதாக 2022ல் பல நாடுகளில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்படும். மக்கள் இதனால் கடுமையாக பாதிப்பார்கள். பல ஆயிரம் பேர் இதனால் பலியாக போகிறார்கள். 2022ல் பூமிக்கு ஏலியன் வரும் என்பதுதான். அதன்படி ‘ஒமுஅமுவா’ (oumuaumu) என்ற சிறிய கோள் மூலம் பூமிக்கு ஏலியன் வரும் என்று பாபா வங்கா கணிப்பில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்.. திடீரென இறங்கிவந்த ரஷ்யா.. ஒரே ஒரு கண்டிஷன்!! (படங்கள்)
உக்ரைனில் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளம்.. ரஷ்யா போர் தொடுக்க இதுவும் காரணம்..!! (படங்கள்)
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் எதிரொலி: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் கடும் சரிவு…!!
ரஷியாவிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்- இந்தியாவிடம் உதவி கேட்ட உக்ரைன் அதிபர்…!!
உக்ரைனில் 2 நகரங்களை கைப்பற்றி உள்ளோம்- ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் அறிவிப்பு…!!
உக்ரைன் கீவ் நகரம் அருகே விழுந்து நொறுங்கியது ராணுவ விமானம்- 14 பேர் கதி என்ன?..!!
உக்ரைன் மீதான படையெடுப்பு காலத்தின் கட்டாயம் – ரஷிய அதிபர் புதின் கருத்து..!!
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க படைகளை அனுப்பும் திட்டமில்லை – ஜோ பைடன் அறிவிப்பு…!!
செர்னோபில் நகரை கைப்பற்றியது ரஷியா – அணுமின் நிலையம் மீதான தாக்குதலால் கதிர்வீச்சு அபாயம்..!!
ரஷியாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் – உக்ரைன் அதிபர் உருக்கம்…!!