அமீரகத்திலிருந்து பெற்றோல் பெற அனுமதி !!
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஓகியூ ட்ரேடிங் இன்டர்நஷனல் நிறுவனத்துக்கு பெற்றோல் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை அடுத்த எட்டு மாத காலத்துக்கு வழங்குவதற்காக, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில வழங்கிய யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2022.02.15 தொடக்கம் 2022.10.14 வரையான எட்டு மாதங்களுக்கான 1.8 மில்லியன் பெற்றோல் பீப்பாய்களை இறக்குமதி செய்வற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதறக்காக பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகஸ்தர்களிடமிருந்து விலைமுறி கோரப்பட்டிருந்தது.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த நீண்டகால ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் ஓகியூ ட்ரேடிங் இன்டர்நஷனல் நிறுவனத்துக்கு வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.