;
Athirady Tamil News

பின்வாங்கினார் நிமல் சிறிபாலடி சில்வா !!

0

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கியதன் பின்னர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் தாம் வகிக்கும் அமைச்சர் பதவிகளில் இருந்து விலக வேண்டுமென, சுதந்திரக் கட்சிக்குள் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும், தான் வகிக்கும் அமைச்சர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என தொழில்துறை அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துவிட்டார்.

அமைச்சர் பதவிகளை வகிப்பதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பிலான உத்தியோகபூர்வ பேச்சுவார்தை கட்சிக்குள் இதுவரையிலும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அறியமுடிகின்றது.

அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர், மத்திய குழுவினால் தீர்மானிக்கப்படும் எந்தவொரு தருணத்திலும் சகல பதவிகளையும் கைவிட்டு, அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தான் தயார் என்றார்.

விமல், கம்மன்பில பதவி நீக்கம் குறித்து சஜித் பதில் !!

கோட்டா குறித்து விமல் அதிரடி அறிவிப்பு !!

விமல், கம்மன்பில, வாசுதேவ மூவரும் நீக்கம் !!

இராஜினாமா செய்யவும் மாட்டேன்: அமைச்சரவைக்கு போகவும் மாட்டேன்: வாசு !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.