சுமார் 78 கோடி சொத்துக்கு அதிரடி தடை !!
சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் அறிவுசார் சொத்து முறைக்கேடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் விசேட பிரிவினரால் இதுவரை 78 கோடி ரூபா சொத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டவிரோதமாக பணம் சம்பாதித்த 1,100 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக போதைமருந்துகள் தொடர்பாக 325 விசாரணைகள் உள்ளன.
இந்த பணியகத்தினால் ஒருவர் கைது செய்யப்பட்டால், போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் கடத்தல் தொடர்பான ஆபத்தான போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.