உக்ரைன் விவகாரம் – ரஷியாவில் தனது சேவையை நிறுத்தியது நெட்பிளிக்ஸ்…!!
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது.
ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் ஈடுகொடுத்து போராடி வருகிறது.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்வதால் ரஷியா மீது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில், ரஷியாவில் எங்களது சேவையை நிறுத்தியுள்ளோம் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ரஷியாவின் புதிய ‘போலி செய்தி’ சட்டத்தினால் டிக்டோக் செயலி நிறுவனம் தனது நேரடி ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது.