ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள ஊக்குவிப்பு!!
ஏற்றுமதியாளர்கள் முகங்கொடுத்துள்ள அதிக பணவீக்கம், மோசமான அந்நிய செலாவணிப் பற்றாக்குறை, உற்பத்தி மூலப்பொருட்களின் இறக்குமதி வரையறைகள் மற்றும் அதிக நடவடிக்கைச் செலவுகள் போன்ற சிரமங்களைக் குறைத்துக் கொள்வதற்கும், சென்ற வருடத்தில் பெற்றுக்கொண்ட ஏற்றுமதி செயலாற்றுகையைத் தாண்டிய முன்னேற்றத்தை இவ்வருடத்தில் பெற்றுக்கொள்வதற்கு இயலுமை கிட்டும் வகையில் ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த முன்மொழியப்பட்டுள்ள ஊக்குவிப்புக் கொடுப்பனவு முறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஏற்றுமதி வருமானத்தை 5,500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மேலதிக வருமானமாக 2022 ஆம் ஆண்டில் ஈட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, கடந்த வருடத்தின் இயைபுடைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்தது 10% வீதமான முன்னேற்றத்தைக் கண்டுள்ள நிறுவனங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள ஊக்குவிப்புக் கொடுப்பனவு முறையின் கீழ் கடந்த வருடம் முதற் காலாண்டில் ஈட்டிய ஏற்றுமதி வருமானத்தை விடவும் மேலதிகமாக ஈட்டுகின்ற ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 30/- ரூபா வீதம் ஊக்குவிப்புக் கொடுப்பனவை செலுத்துவதற்கு வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.