;
Athirady Tamil News

முட்டை தாக்குதல்; ஆட்சி மாறியதும் தண்டனை உறுதி!!

0

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தி அரசாங்கம் வரலாற்று தவறை செய்துவிட்டதாக தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், நாட்டில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதன் பின்னர், தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையை நிச்சியமாக வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் எரிசக்திப் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான நேற்றைய (10) விவாதத்தில், அக்கட்சியின் தலைமையகத்தில் மேற்கொள்ளப்பட்ட முட்டைத் தாக்குதல் தொடர்பிலும் பலர் உரையாற்றியிருந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்தின் முன்பாக ஹிருனிக்கா போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவரது வீட்டுக்கு முன்பாக குண்டர்கள் சென்று சத்தமிட்டனர். இதன் பின்னர் குண்டர்களோடு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்துக்கு சென்றிருந்த ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, கட்சியின் அலுவலகத்தின் மீது அழுகிய முட்டைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர் என்றார்.

ஹிருனிக்கா முட்டை வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்கவில்லை. நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வையே ஹிருனிக்கா கோரியிருந்தார். ஜனாதிபதியின் இல்லத்துக்கு முன்பாக சத்தம் போட்டதாலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்துக்கு முன்பாக சென்று சத்தமிட்டதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் கூறியுள்ளார். இதுதான் தற்போதைய அரசாங்கம் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆளுங்கட்சி எம்.பி மதுர விதானகே, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்துக்கு முன்பாக இடம்பெற்ற சம்பவத்தை தான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பல கேள்விகளை உள்ளடக்கிய ஆவணம் ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தியினரிடம் வழங்குவதற்காகவே அங்கு சென்றிருந்தேன் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அங்கிருந்த மக்கள் சிலரே அழுகிய முட்டைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருக்கக்கூடும் இத்தாக்குதலுக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸாருக்கு தான் ஆலோசனை வழங்கியுள்ளேன் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை இதன்போது குறுக்கீடு செய்து உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, மதுர விதானகே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்துக்கு சென்றதை நாம் பார்த்தோம். எங்களுக்கு உள்ளப் பிரச்சினை என்னவென்றால், தாக்குதல் நடத்த சென்றவரே பொலிஸார் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கியதாக கூறுவதுதான் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.