கேரளா அருகே பழுதடைந்த கப்பலில் சிக்கித் தவித்த ஊழியர்கள் மீட்பு – கடலோர காவல்படை நடவடிக்கை…!!
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பேப்பூரில் இருந்து 18 கடல் மைல் தொலைவில் எம்.எஸ்.வி.பிலால் என்ற சரக்கு கப்பல் பழுதடைந்துள்ளதாகவும் அதில் 8 பணியாளர்கள் சிக்கியுள்ளதாகவும் கடலோரக் காவல்படை தகவல் வந்தது.
இதனையடுத்து விக்ரம் என்ற மீட்பு கப்பல் மூலம் அந்த பகுதிக்கு சென்ற கடலோரக் காவல்படையினர் பிலால் கப்பலில் இருந்த 8 பணியாளர்களை பத்திரமாக மீட்டனர்.
லட்சத்தீவுக்குச் செல்லும் வழியில் அந்த கப்பலுக்குள் கடல்நீர் புகுந்ததால் எஞ்ஜின் பழுதடைந்ததாகவும், இதையடுத்து அந்த கப்பல் இன்டர்செப்டர் படகுடன் இணைக்கப்பட்டு திரும்ப எடுத்துச் செல்லப்பட்டதாக கடலோர காவல்படையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Indian Coast Guard successfully rescued 8 crew members from a vessel named MSV Bilal. The MSV while proceeding to Lakshadweep reported water ingress and engine failure 18 nautical miles off Beypore, Kerala.
(Video source – Indian Coast Guard) pic.twitter.com/TqclkKbX1d
— ANI (@ANI) March 12, 2022