;
Athirady Tamil News

வவுனியாவில் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13வது திருத்தச்சட்டத்திற்கு எதிராக மாபெரும் பேரணி!! (படங்கள்)

0

ஒற்றையாட்சிக்குட்பட்ட 13வது திருத்தச்சட்டத்திக்கு எதிராகவும், சமஸ்டி தீர்வினை வலியுறுத்தியும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியில் ஏற்பாட்டில் வவுனியாவில் மாபெரும் பேரணியொன்று இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகாமையிலுள்ள பண்டாரவன்னியன் நினைவுச் சிலைக்கு முன்பாக இன்று (13.03) பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பித்த பேரணியானது, ஏ9 வீதியூடாக சென்று தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டு கழக மைதானத்தினை அடைந்து பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

சிவப்பு, மஞ்சள் கொடிகளுடன் பேரணியில் கலந்து கொண்ட மக்கள் ‘ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ம் திருத்த சட்டத்தினை நீக்கி சமஸ்டி தீர்வினை நடைமுறைப்படுத்து, சர்வதேச விசாரணை வேண்டும், இனப்படுகொலைக்கு நீதி வேண்டும், இந்த மண் எங்களில் சொந்த மண், இராணுவமே வெளியேறு, பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கு’ உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

பேரணி முடிவில் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்த சட்டத்தை நீக்பகக் கோரி கடந்த ஜனவரி 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கிட்டு பூங்கா பிரகடனத்தினை வலியுறுத்தி ஐயனார் விளையாட்டு கழக மைதானத்தில் பொதுக்கூட்டம் இடம்பெற்றிருந்ததுடன் தமிழர் எழுச்சி நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், கட்சி உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.