இராணுவமயமாக்கலுக்கு கடுமையான எதிர்ப்பு !!
நாட்டின் உயர்கல்வியை இராணுவமயமாக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஒன்றியம் கடுமையாக எதிர்த்தது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் இன்று (14) சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெற்றது.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை நிறைவேற்றும் முயற்சிகளுக்கு எதிராக, தற்போதைய அரசாங்கத்திடம் இருந்து கல்வி முறையை பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்ததாக ஒன்றியத்தின் உறுப்பினர் கலாநிதி மஹிம் மெண்டிஸ் தெரிவித்தார்.
பல மாதங்களுக்கு முன்பே இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் முயயன்றதாகவும் கல்வி முறையை இராணுவமயமாக்குவதைத் தவிர்க்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
இந்த சட்டமூலம் தொடர்பில் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் பலர் பேச முற்பட்டபோதும், கல்விச் செயற்பாடுகளை ஜனநாயக முறைப்படி முன்னெடுக்குமாறும் பல்கலைக்கழக அமைப்பைப் பாதுகாக்குமாறும் கோரியபோது, அவர்கள் எதேச்சாதிகாரமாக கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.