சிறுநீரகக் கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்!! (மருத்துவம்)
தலை வலி, தடிமன் என்பவற்றை போல சிறுநீரகப் பிரச்சினையும் தற்பொழுது பரவலாகி வரும் ஒன்றாக மாறிவிட்டது. சீறுநீரகங்களில் உள்ள கிரிஸ்ட்ல் எனப்படுகின்ற உப்புக்கள் ஒன்று திரண்டு, சிறுநீரகப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம். மருத்துவர்களின் ஆலோசனைகளை முறையாக கேட்டு, சிகிச்சைகளைப் பெற்றுவரும் பட்சத்தில் சிறந்த தீர்வினை பெற்றுகொள்ளமுடியும். எனினும் சிலருக்கு நவீன மருத்துவ முறைகளில் ஈடுபாடு இருப்பதில்லை. அதிகமாக ஆயர்வேத மருத்துவம் மற்றும் வீட்டு மருத்துவங்களையே நாடுகின்றனர்.
சீறுநீரகக் கல்லை அகற்றுவதற்கும் வீட்டு மருத்துவ முறைகள் காணப்படுகின்றமை பலர் அறியப்படாத விடயமொன்றாகும். அதாவது, தினசரி 4 லீற்றர் நீர் அருந்த வேண்டும். அதேசமயம் கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்றைய காலங்களில் வாரத்திற்கு இருமுறையும் இளநீர் பருக வேண்டும். பார்லியை நன்றாக வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிகமாக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும்.
அத்துடன் முள்ளங்கி சாறு 30 மில்லிலீற்றர் குடித்து வந்தாலும் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். மேலும் வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள கொள்ள வேண்டும். வெள்ளரிப் பிஞ்சு, நீராகாரம் என்பன சிறுநீரகக் கோளாறுகளுக்கு அருமருந்தாகும். இவற்றை போலவே புதினாக் கீரையையும் தொடர்ந்து சாப்பிட்டு வர சிறுநீரகக் கோளாறுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.