மகிழ்ச்சி பட்டியலில் இலங்கையின் இடம் !!
உலகளாவிய ரீதியில் 149 நாடுகளைக் கொண்ட, உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இலங்கை 129ஆவது இடத்திலுள்ளது.
கடந்த பட்டியலில் 130 ஆவது இடத்தில் இருந்து இலங்கை முன்னேறியிருந்தாலும் பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவுகள் மற்றும் நேபாளம் போன்ற சக பிராந்திய நாடுகளுக்கு பின்னால் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய உலக மகிழ்ச்சி அறிக்கையின் கடந்த வெள்ளிக்கிழமை (18) வெளியிடப்பட்டிருந்தது. அதில், 2018-2020 வரையிலான மூன்று வருட காலப்பகுதியில் இலங்கை 129 வது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஆயுட்காலம், தாராள மனப்பான்மை, சமூக ஆதரவு, சுதந்திரம் மற்றும் ஊழல் ஆகியவற்றைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் 149 நாடுகளை அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்து அறிக்கையை வெளியிடுகின்றனர்.
அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தான் 149 ஆவது இடத்தில் மகிழ்ச்சியற்ற நாடாகவும், பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாகவும் முதலிடத்தில் உள்ளதுடன், டென்மார்க், சுவிட்சர்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகியவை முறையே அடுத்த இடங்களில் உள்ளன.