இ.தொ.கா தலைவர் செந்தில்?
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பொதுச் செயலாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்றும் அறிய முடிகிறது.
சில முக்கிய பதவிகளுக்கு தொண்டமான் பரம்பரை சேர்ந்த சிலர் நியமிக்கப்படலாம் என்று அறிய முடிகிறது.
காங்கிரஸூக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக, காங்கிரஸின் தேசிய சபை, கொட்டகலையில், இன்று காலை 10 மணிக்கு கடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.