;
Athirady Tamil News

நாட்டில் முதன்முறை தங்கத்தின் விலை 200,000 ரூபாயாக எகிறியது!!

0

நாட்டில் தங்கத்தின் விலை இன்றும் 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சம் ரூபாய் என வரலாற்றில் முதல் தடவையாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இன்று காலை இந்த அதிகரிப்பு ஏற்பட்டது என்று தங்க வியாபாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி நெகிழ்வான நிலைக்கு விடப்பட்டதால் டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனால் இலங்கையில் தங்கம் மீதான விலையில் தாக்கம் செலுத்தியுள்ளது

யாழ்ப்பாணத்தில் இன்று (மார்ச் 30) 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 500 ரூபாயாக காணப்பட்டது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கம் பவுண் ஒன்று 2 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு பவுண் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாயாகக் காணப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.