டீசல் தேடுபவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி!!
அண்மையில் இலங்கை வந்த டீசல் கப்பலுக்கு செலுத்த தேவையான 52 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால் இதுவரை எவ்வித கொடுப்பனவும் செய்யப்படவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலில் 37,500 மெற்றிக் தொன் டீசல் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த டீசலை கடந்த 29ம் திகதி தரையிறங்குவதாக இருந்தது.
குறித்த கப்பலில் உள்ள டீசல் கிடைக்காததால், நாட்டில் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய கடன் வசதியின் கீழ் நாட்டிற்கு வரவுள்ள எரிபொருள் கப்பல் ஒன்று நாளை (01) இரவு 38,200 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு நாட்டை வந்தடைய உள்ளது.
இதே கடன் திட்டத்தின் கீழ் மேலும் 38,200 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.