பாகிஸ்தானில் சட்டத்தின்படி ஆட்சி நடைபெறுவதை ஆதரிக்கிறோம்- அமெரிக்கா விளக்கம்…!!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீது அந்நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.
இதையடுத்து பாகிஸ்தான் மக்களிடையே உரையாற்றிய இம்ரான் கான், தம்மை பதவியில் இருந்து நீக்க அமெரிக்கா சதி செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், பாகிஸ்தானில் அரசியலமைப்பு செயல்முறைபடி ஆட்சி நடைபெறுவதை அமெரிக்கா ஆதரிக்கிறது என்றார்.
பாகிஸ்தானில் தற்போதைய நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நாங்கள் பாகிஸ்தானின் அரசியலமைப்பு செயல்முறை மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஆதரிக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா மீதான இம்ரான்கான் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.